Tuesday, October 20, 2009

மனிதன் என்பவன்....

மனிதன் என்பவன் யார்? பல நாள் கேள்வி - இன்னும் சரியாய் விடை கிடைக்கல.. :-) இருந்தாலும் எனக்கு தோணிய பதில். விலங்கியல் (அதுதான் Zoology) படிக்கும் போது உயிரினங்கள் எப்படி உறுவானதுன்னு படிச்சிருக்கோம். சிலர் அதை நம்புவோம். Science, Evolution அப்படி எல்லாம் அதுக்கு பேர் சொல்லி நம்புவோம். சிலர் எல்லாம் கடவுள் செயல்னு சொல்லறோம். (நான் முதல் விஷயத்த தான் நம்பறேன்). அதுனாலதான் இந்த blog. விலங்கியல்ல பயன் படுத்தப்படும் வார்த்தை "Home Sapiens". இந்த இலத்தின் வாத்தைக்கு பொருள் "Wise man". இந்த "Homo sapiens" என்பவர்கள் "Great Ape" எனப்படும் பிரிவை சேர்ந்தவர்கள். ஆக மனிதன் என்னும் பிரிவே குரங்கின் கிளை (sub-set). இது science தெரிஞ்ச எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். என்னை பொறுத்த வரை மனிதன் குரங்கின் மரிமாற்றமே தவிர, முழுமையாக தன்னை குரங்கில்லிருந்து மாற்றிக்கொண்ட ஒரு உயிர் இல்லை. விலங்கியல் படி பார்த்தால், மனிதன் எனபடும் பிராணி மற்ற உயிரினங்களை காட்டிலும் மிகவும் வளர்ச்சி அடைந்த Digestive system, Nervous system, Excretory system, Respiratory system, இன்னும் இதர system கொண்டது. இந்த பிராணியோ உலகில் உள்ள மற்ற பிராணிகளை விட அதிகம் சிந்திக்கும் திறன் கொண்டது. அதனால் இந்த பிராணி உலகின் மற்ற உயிரினங்களை எல்லாம் தனக்கு ஒரு படி கீழயே பார்த்தது. மற்ற உயிரினங்கள் எல்லாம் "அது", "இது" என்றழைக்கப்பட வேண்டிய அக்ரினையகாவும், மனிதன் மட்டும் "நீ", "நான்", "அவன்", "அவள்", "அவர்", "நாம்" என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டிய உயரத்தினையகவும் சொல்லிக்கொண்டது இந்த மிருகம். இது தப்பு இல்ல. எல்லா விஷயத்திலயும் சிறப்பாக இருக்கும் மனிதன் என்ற மிருகம், தன்னை தானே உயர்த்திக் கூறிக்கொள்வது தப்பு இல்லை. ஏன்னா தான் ஒரு உயர்ந்த உயிரினம்னு புரிஞ்சிக்க தெரிஞ்ச மனிதன் நிச்சயம் மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் தான். அதுல எந்த சந்தேகமும் இல்ல. மனிதனுடைய genes- உம் மனித குரங்கின் genes- உம் 99.9 % ஒன்னா இருக்காம். மீதம் உள்ள 0.1 % ல தான் மனிதன் இந்த அளவு சிறந்து விளங்குகிறான். ஆனால் இந்த மனிதன் மிகவும் விந்தையான பிராணி. உதாரனத்துக்கு நாய் - இந்த மிருகம் தன் பெரிய குடும்பத்தை சேர்ந்த நரி, ஓநாய், குள்ள நரி இவற்றோடு கொஞ்சம் அல்லது நிறையவே ஒத்து போகும். அதுபோல பூனை, தன் குடும்பத்தை சேர்ந்த புலி, சிறுத்தை இவற்றோடு நிறையவே ஒத்து போகும். ஒரு பூனையின் குணங்கள் நாயோடு ஒத்துப் போவதில்லை. ஆனால் மனிதன் மிகவும் குழம்பிப்போன மிருகமா(!!!), பல மிருகங்களோடும் ஒத்து போகிறான். விஞ்ஞானம் படி பார்த்தால் மனிதன் குரங்கோடு மட்டுமே தான் ஒத்து போக வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் பல மிருகங்களின் சாயங்களை எடுத்துக்கொள்கிறான். உதாரணத்துக்கு நாய் போல சில மனிதர்கள் - நன்றி மறப்பதில்லை. தேள் போல சில மனிதர்கள் - உதவி செய்ததை அடுத்த நிமிடமே மறந்து துரோகம் செய்றவங்க. அழகப் பார்த்து ஆபத்தை தேடி போகும் மனிதன் - விட்டில் பூச்சி போல. எத்தன முறை ஏமாந்தாலும் குயில் முட்டையை அடை காக்கும் காக்கா மாதிரி எத்தன முறை ஏமந்தாலும் பாடம் கத்துக்காத மனிதன். எல்லா நேரமும் மத்தவங்களுக்கு உதவி செய்யும் மாடு மாதிரி சில பேர், யாரை ஏமாத்தி தன் உணவை எடுக்கலாம்னு தேடற நரி போல சில பேர், என்ன நடந்தாலும் நான் தான் ராஜான்னு சிங்கம் போல இருக்கும் சில பேர். இப்படி மனிதன் மிருகத்தின் நெருங்கிய தோழனா இருக்கான். மரங்கொத்தி எப்போ பார்த்தாலும் தேவைக்கு அதிகமா உணவு சேர்க்குமாம். அத மாதிரி என் பரம்பரைக்கே பணம் சேர்கரேன்னு சொல்லி பணம் சேர்க்கும் சிலர். ஒரு படத்துல வடிவேலு காமெடி. பிச்சைக்கார வடிவேலுவை கிண்டல் செய்யும் பணக்காரனைப் பார்த்து வடிவேலு சொல்லும் வார்த்தை - "போயா, 6.8 ன்னு ஒரு பூகம்பம் வந்தால் உனக்கும் என் நிலைமைதான். அப்போ கூட நான் இதே மாதிரி தான் இருப்பேன்" (இங்கு குறிப்பிடப் பட்டது குஜராத் பூகம்பம் பற்றி). இது காமெடி தான். ஆனால் அதில் எவ்வளவு பொருள்!! கெமிஸ்ட்ரி terms-ல "Principle of Uncertainty". Maths terms-ல "Probability". சினிமா terms-ல காமெடி. ஆனால் இதன் பொருள் புரிந்தவன், நிலை இல்லாத வாழ்கை, இதுல யாருக்காக பிறரை ஏமாத்தரோம்னு புரிஞ்சுப்பான். இது அரசியல்வாதிகளுக்கான தத்துவம்னு கூட சொல்லலாம். மனிதன் ஒரு மிருகத்தை மட்டும் ஒத்துப் போவதில்லை. நேரத்திற்கு ஏற்ப அதை மாற்றிக் கொள்கிறான். சில சமயம் பூனை போல் இருப்பவன், சில சமயம் நாய் கூட ஒத்துப் போகிறான். ஆனால் எதாவது ஒரு மிருகத்தின் தன்மை தான் அவனிடம் மேலோங்கி நிற்கும். 75 % நேரம் அந்த ஒரு மிருகத்தோடு தான் ஒத்துப் போகிறான். மீதான் 25 % தான் பிற மிருகம் போல் ஆகிறான். மனிதன் தப்பு செய்யும் போது - பிறரை பார்த்து பொறாமை படும்போது, பிறருக்கு கெடுதல் பண்ணும் போது, பிறர் அன்பை புரிந்து கொள்ளாத போது, பிறரை இகழ்ந்து பேசுவதில் இன்பம் காணும் போது, இப்படி பல தவறுகள் செய்யும் போது - நீ மனிதனா மிருகமா - அப்படீன்னு கேக்கறோம். மனிதனே மிருகம் தானே - அப்புறம் எதுக்கு அவனை இன்னொரு மிருகமா என்று கேக்கறோம்? அப்போ மனிதனுக்கு என்று ஒரு குணமும் இல்லையா? வள்ளுவர் மொழியில் அவர் மனிதனுக்கு 3 குணங்கள் சொல்கிறார். கடவுள் நம்பிக்கம், அறிவின் கூர்மை, மிருக குணம். மனிதன் மிகச்சிறந்த மிருகம் என்பதால் பொறாமை, கோவம், பிறரை துன்புறுத்துதல், பேராசை இது எல்லாம் மற்ற மிருகங்களில் குணம் என்கிறார் (குறள் 35). ஆக தனக்கென்று அறிவு இருந்தும் மிருகம் போல வாழும் மனிதன் - மனிதன் என்னும் தனி நிலைமையை அடைவது இல்லை. மனிதன் தனக்குள்ள இருக்கற இந்த மிருக குணத்த விட்டுட்டு அறிவை பயன்படுத்தி வாழும்போது மனிதன் என்ற சொல்லுக்கு உரியவன் ஆகிறான். அது இல்லாதவரை, மனிதனா இல்லை மிருகமா (!!!) அப்படீங்கற குழப்பம் இருக்கத்தான் செய்யும். மனிதன் தன்னுடைய அறிவால் விஞ்ஞானத்தில் பல சாதனைகள் புரிந்துவிட்டான். அதை மிருக வழியில் பயன் படுத்தாமல் மனிதனை போல் பயன்படுத்தினால் நல்லது. இதனை எழுதும் நான் எந்த மிருகத்தோடு ஒத்துப் போகிறேன்னு எனக்குத் தெரியாது. ஆனால் அதை புரிந்து கொண்டு மாறுவதர்க்குத்தான் அறிவு என்பது இருக்கிறது. கண்ணதாசன் சொல்லிச் சென்றார் - "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்". மனிதன் என்னும் மிருகத்தின் அடுத்தப் பரிமாற்றம் தெய்வ நிலையாக இருக்க வேண்டுமே தவிர, மிருக நிலைக்கு போகக்கூடாது. இந்த மாற்றம் evolution concepts க்கு வேண்டுமானால் பயன் இல்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகத்திற்கு தேவையான மாற்றம்.

No comments: