என்னிடம் வந்து விழுவதை எல்லாம்
எடுத்து எரித்து விடுவார்களாமே
அப்படியானால் என்னிடமே
விட்டு விடுங்கள்
அந்த குழந்தையை!!!
-- தாய் மடி ஆகிறது குப்பைத் தொட்டி
இந்த வீட்டையும் நல்லா
கட்டி முடித்துவிட்டோம்
மனதில் மகிழ்ச்சியில்
தன் குடிசையை நோக்கி நடந்தாள் சித்தாள்
அப்பொழுதுதான் புரிந்தது
கலைந்தது கனவு மட்டும் அல்ல இனி என் தூக்கமும் தான்.....
அன்று நீ சிரித்தாய், நான் சிரித்தேன்
இன்று நான் அழுதேன், நீ சிரிக்கிறாய்
---- நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக
புரியாமல் கோபப்பட்டேன்.
அதற்கும் சிரித்தாய்
கோபத்திலும் நான் அழகு என்று சொல்லி..
போரைத் துறந்தான் அசோகன்
இன்று கலிங்கமும் இல்லை, ராஜ்யங்களும் இல்லை
ஆனால் போர் மட்டும் இருக்கிறது
என்ன செய்ய இன்று யாரும் அசோகன் இல்லையே!!!
ஒரு வேலையும் இல்ல, ஏன் யோசிப்பதற்குக் கூட ஒண்ணுமே இல்லன்னு நடந்து போயிட்டுருந்தப்போ, "நானும் வாலி, வைரமுத்து " அப்படிங்கற விபரீத எண்ணம் மனசுல எழுந்ததன் விளைவு தான் என்னுடைய சில ஹைகூக்கள்.
No comments:
Post a Comment